சிக்கலில் ‘டிக்டாக்’... ஓராண்டுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும்; இல்லாவிட்டால் தடை!


அமெரிக்காவில் தடையை எதிர்கொள்ளும் டிக்டாக்

சீன நாட்டின் பிரபல டிக் டாக் நிறுவனம், ஓராண்டுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்படாவிட்டால், அதனை அமெரிக்காவில் தடைசெய்யும் சட்டத்துக்கு அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ஒப்புதல் அளித்த புதிய சட்டத்தின்படி, அந்நாட்டில் டிக்டாக் ஓராண்டுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்கா முழுவதும் அதற்கு தடை விதிக்கப்படும். இந்தச் சட்டம் அமெரிக்காவின் இரண்டு அவைகளான ஹவுஸ், செனட் ஒப்புதலுக்குப் பிறகு அதிபர் ஜோ பைடனின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் டிக் டாக் வெளியிட்டுள்ள பதிவில், ‘டிக்டாக்கை தடை செய்யும் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம். இந்தத் தடை 7 மில்லியன் வணிகங்களை அழிப்பதோடு, 170 மில்லியன் அமெரிக்கர்களை மவுனிக்கச் செய்யும்’ என குறிப்பிடப் பட்டுள்ளது. இதேபோல் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி சவ் ஜி செவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'இந்த மசோதா ஏமாற்றமளிக்கிறது. உறுதியாக இருங்கள்.

அமெரிக்காவில் டிக் டாக் நிறுவனத்துக்கு சிக்கல்

நாங்கள் எங்கும் செல்லவில்லை. உண்மையும், அரசியலமைப்பும் எங்கள் பக்கத்தில் உள்ளன. மீண்டும் வெற்றிபெறுவோம் என எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x