தென்கொரியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள பூசான் நகருக்கு அருகே உள்ள கேடியோக் தீவுகளில் அந்நாட்டு அரசு விமான நிலையம் ஒன்றை கட்ட உத்தேசித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும் குடியரசு கட்சியின் தலைவருமான லி ஜே-மியூங் அங்கு சென்று இருந்தார். ஆய்வை முடித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் லீயின் பெயர் எழுதிய பேப்பரால் செய்யப்பட்ட முகமூடியை மாட்டியபடி இளைஞர் ஒருவர் லீயை நோக்கி முன்னேறியுள்ளார். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோட முயன்றார். ஆனால் உடனடியாக செய்தியாளர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதனிடையே கழுத்தில் காயத்துடன் கீழே விழுந்த லீக்கு ரத்தம் வெளியேறியதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து சென்ற போலீஸாரும், மீட்புப் படையினரும் லீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ நேரலையில் ஒளிபரப்பான நிலையில் தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே இந்த நபர் எதற்காக லீயை குத்தினார் என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடகொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், உள்ளாட்டிலேயே தென் கொரியாவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்
அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!
61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!