ஜப்பானை தொடர்ந்து வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போல் ரஷ்யாவிலும் 4.8 அளவிற்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால், அந்நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானது. ஒன்றரை மணி நேரத்தில் 20க்கும் மேற்பட்ட முறைகள் 4.5 ரிக்டருக்கும் அதிகமான அளவில் நிலநடுக்கங்கள் தோன்றியதால் அந்நாட்டின் பல்வேறு இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலையின் முதல் பகுதி தாக்கியுள்ளது.
அடுத்தடுத்து அலைகள் தாக்கலாம் என்கிற அச்சம் நிலவுவதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஜப்பானின் கடற்கரை நகரங்களான இஷிக்குவா, நிக்காடா, டொயாமா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடற்பகுதிகளில் மிக மோசமான சுனாமி அலைகள் தாக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
சில இடங்களில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 6.8 அடி வரையிலும் அலைகள் கரையை அடையலாம் என தகவல் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல் ரஷ்யாவின் கிழக்கு பகுதியிலும் சுனாமி தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கிரம்ளின் மாளிகை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெக்கலின் தீவுகள் அமைந்துள்ள பகுதியில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடற்கரையோரம் இருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடரும் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கையின் காரணமாக இந்த நாடுகளில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!
அதிகாலையில் சோகம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி!
குட்நியூஸ்... சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 27 இடங்களில் இலவச வைஃபை சேவை!
அதிர்ச்சி... ஒன்றரை வயது மகனின் கையை உடைத்த தாய்: காதலனுடன் எஸ்கேப்!
புது வருஷத்தில் தெறிக்க விட்ட சாக்ஷி அகர்வால்... வைரலாகும் புகைப்படங்கள்!