ஜப்பானில் ஒன்றரை மணி நேரத்தில் 21 நிலநடுக்கம்... சுனாமி அச்சத்தால் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் ஓட்டம்


நிலநடுக்க அச்சத்தால் வீதிக்கு வந்த ஜப்பானியர்கள்

ரிக்டர் ஸ்கேலில் 4.0 என்பதற்கும் மேலான நிலநடுக்கங்களில், ஒன்றரை மணி நேரத்தில் 21 முறை நேரிட்டதில் ஜப்பான் கதிகலங்கிப் போயுள்ளது.

ஜப்பானை முற்றுகையிட்ட நிலநடுக்கங்கள்

ஜப்பானை இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாதித்ததில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நண்பகல் 12.40 மணியளவில் ஜப்பானின் மேற்கு கடலோரத்தில் தொடர் நில நடுக்கங்கள் அடையாளம் காணப்பட்டன. ரிக்டர் ஸ்கேலில் அதிகபட்சமாக 7.6 என்றளவில் நிலநடுக்கம் தென்பட்டதில் அங்கே உச்சபட்ச எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது

ஹோன்ஷு பகுதியில் சுமார் 13 கிமீ ஆழத்தில் கண்டறியப்பட்ட நிலநடுக்கம் காரணமாக நிகாடா, இஷிகாவா, யமக்ட்டா மற்றும் டோயாமா ஆகிய பிராந்தியங்களுக்கு ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை அறிவித்தது. இதனையடுத்து கடலோரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுவது, ஆபத்தான சிதலங்கள் என ஜப்பான் நிலநடுக்கம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் சர்வதேச சமூகத்தை அதிரச் செய்துள்ளன. இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை உறுதியானால், ஜப்பான் மிகமோசமான பாதிப்புடன் புத்தாண்டை தொடங்கியிருக்கிறது என கணிக்கலாம்.

குறிப்பாக தொடர்ந்து எழுந்த நிலநடுக்கங்கள் பாதிப்பின் வீரியத்தை உணர்த்தி உள்ளன. அடுத்தடுத்து பல நிலநடுக்கங்கள் நேரிட்டதில், அவற்றில் ரிக்டர் ஸ்கேலில் 4 என்ற அளவுக்கு மிகுதியானவை மட்டும், 90 நிமிடங்களில் 21 என்ற எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமன்றி அவசர உதவிக்காக ராணுவத்தினரும் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்காக களத்தில் இறங்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!

x