ஜப்பானை தாக்கியது சுனாமி; பதைபதைப்பில் மக்கள்... உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்!


ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி அலைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் இந்திய தூதரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மேற்கு கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் "அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என ஜப்பான் அரசு அறிவித்து.

ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மக்களை உடடினாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் அலை அலையாக ஊருக்குள் புக தொடங்கியுள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளும் வகையில் இலவச எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக தனி அதிகாரிகளை நியமித்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!

x