சுனாமி எச்சரிக்கை: ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!


ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

வடக்கு, மத்திய ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இஷிகாவா, நிகட்டா மற்றும் டொயாமா ஆகிய கடலோரா மாகாண பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை விட்டு மக்கள் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என ஜப்பான் ஒளிபரப்பு கழகம் வெளியிட்டுள்ள தகவலை ஜப்பான் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், டோக்கியோ மற்றும் கான்டோ பகுதி முழுவதும் உணரப்பட்டது. நல்வாய்ப்பாக நிலநடுக்கம் காரணமாக இதுவரை அங்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதையும் வாசிக்கலாமே...


2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?

புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

x