அதிர்ச்சி... இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து- 13 பேர் உயிரிழப்பு


ஸ்பெயின் தீ விபத்து

ஸ்பெயினில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர், 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினின் தென் கிழக்கு நகரமான முர்சியாவின் அட்டாலயா பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில், நேற்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த விடுதியில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடினர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், உள்ளே இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போனதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்க போராடினர். ஆனால், 4 மணிநேர நீண்ட போரட்டத்திற்கு பிறகே அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, கட்டிடத்தின் உள் நுழைந்தனர்.

ஸ்பெயின் இரவு விடுதியில் தீ விபத்து

இதையடுத்து, உள்ளே இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதில் 13 பேர் பலியான நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் காணாமல் போன நிலையில், அவர்கள் தப்பிச்சென்றார்களா அல்லது உள்ளே சிக்கி உயிரிழந்தார்களா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.

அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த இரவு விடுதி தீப்பிடித்ததற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. நகர மேயர் ஜோஸ் பலேஸ்டா இந்த சோக சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.

இதையும் படிக்கலாமே...

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்! ’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..! மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது! சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ! பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

x