புளூம்பெர்க் வெளியிட்ட உலகின் பணக்காரப் பெண்கள் பட்டியலில், பிரான்சை சேர்ந்த அழகுசாதன பொருட்கள் நிறுவனமான லோரியல் (L'Oréal) உரிமையாளர் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மெயெர்ஸ்(Francoise Bettencourt Meyers) முதலிடம் பிடித்துள்ளார்.
பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மெயெர்ஸ் 100 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்த உலகின் முதல் பெண்மணி என்ற வரலாற்றை உருவாக்கினார். உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியும் கூட.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, முகேஷ் அம்பானி, அமான்சியோ ஒர்டேகா மற்றும் கௌதம் அதானி போன்ற குறிப்பிடத்தக்க நபர்களை விட முன்னணியில் உலகின் 12 வது பணக்கார நபராக அவர் இருக்கிறார். அவரது சொத்துமதிப்பு சமீபத்தில் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டியது.
70 வயதான பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மெயெர்ஸ் 268 பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய மாபெரும் நிறுவனமான L'Oréal குழுவில் துணைத் தலைவர் பதவியை வகிக்கிறார்.
பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மெயெர்ஸின் தாத்தா ஆரம்பித்த இந்த நிறுவனத்தை தற்போது, நிர்வகித்து வரும் இவருக்கு 100.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகள் உள்ளது. இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதி உள்ள இவர், பியானோ இசைக்கருவியை தினமும் வாசிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். பெற்றோருக்கு ஒரே குழந்தையான இவர், 2017ல் இந்த நிறுவனத்தின் தலைமைப்பதவிக்கு வந்தார்.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு?! எதிர்த்து கோஷமிட்ட ரசிகர்கள்!
விஜயகாந்துக்கு செய்வினை வெச்சுட்டாங்க... பீதியைக் கிளப்பிய கங்கை அமரன்!
நன்றி மறந்த வடிவேலு... வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
அதிர்ச்சி... தேசிய விளையாட்டுப் போட்டியில் 25 வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர்!