புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முற்றிலும் தடை... பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு!


பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர்

புதிதாக பிறக்கவுள்ள 2024ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டு முடிவடைந்து 2024-ம் பிறக்கவுள்ள நிலையில், பெரும்பாலான உலக நாடுகள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளன. இந்தியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரைமணி நேரம் கழித்து புத்தாண்டு பிறக்கும். இந்த நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அந்த நாட்டின் காபந்து (caretaker) பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் தடைவிதித்துள்ளார்.

பாகிஸ்தான் கொடி

புத்தாண்டுக்கான தடை குறித்து மக்களிடம் பேசி பேசிய பொறுப்பு பிரதமர் கக்கர், 'காசாவில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார்.

புத்தாண்டு

மேலும், “விதிமுறை அனைத்தையும் மீறி இஸ்ரேல் படை 21 ஆயிரம் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. இதில் 9 ஆயிரம் குழந்தைகள் அடங்குவர். அப்பாவி குழந்தைகள் படுகொலை, காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதமின்றியுள்ள பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை என்பது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களையும், முஸ்லிம் உலகத்தையும் கவலையைில் ஆழ்த்தியுள்ளது. பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் நாடு இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருக்கிறோம்” என்றார்

இதையும் வாசிக்கலாமே...


அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

x