ஷாக்... இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலின் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் இன்று காலை நான்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, முதல் நிலநடுக்கம் 10கி.மீ ஆழத்தில் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்த மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏற்பட்ட நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

நான்காவது நிலநடுக்கம் 7.7 கி.மீ ஆழத்தில், 5.8 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் கடலுக்கு கீழ்10 கி,மீ மற்றும் 7.7 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஜப்பான் மற்றும் ரஷியா இடையே உள்ள குரில் தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் நேற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x