சமீபத்தில் தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தென்சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே சமயம் அந்த கடல் பகுதி தங்களுடையது என தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனாலும் தென்சீன கடல் பகுதியில் சீன கடற்படை தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
அண்மையில், இந்த கடல் பகுதியில் பயணித்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படை கப்பல்களை, சீன போா் கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதாக பிலிப்பைன்ஸ் புகாா் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் தென்சீன கடல் பரப்பானது சர்ச்சைக்குரியதாக உள்ளது
இந்த சூழலில்தான் இம்மாத தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் இந்திய கடற்படையும் பிலிப்பைன்ஸ் கடற்படையும் கூட்டு போா் பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு 3-ம் தரப்பினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
இந்த கூட்டு போா் பயிற்சி குறித்து பேசிய சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வூ கியான், 'இந்தியா - பிலிப்பைன்ஸ் கூட்டு போா் பயிற்சி குறித்த அறிக்கையை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூன்றாம் தரப்பு நாடுகளின் நலனையோ பிராந்திய அமைதியையோ பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது' என தெரிவித்துள்ளார். இந்திய - சீன எல்லைப்பகுதிகளில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த கூட்டு போர் பயிற்சியால் இரு நாட்டு உறவில் மேலும் சிக்கல் உருவாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
'கேப்டன்' பெயர் விஜயகாந்திற்குப் பொருத்தமானது... நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை குறைந்தது!
செல்போனை கேட்டதால் விபரீதம்... கணவன் கண்ணில் கத்திரிக்கோலால் குத்திய மனைவி!