அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்; கடும் சேதத்தை சந்தித்து வரும் வட இங்கிலாந்து


ஜெர்ரிட் புயல்

வட இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளை தாக்கியுள்ள ஜெர்ரிட் புயலைத் தொடர்ந்து ஹெங்க் புயலும் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏற்கெனவே கடும் சேதத்தை சந்தித்துள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள குளிர்கால புயலுக்கு ஜெர்ரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது வடக்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகள் கடந்து ஆர்டிக் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜெர்ரிட் புயல் காரணமாக அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்து பகுதிகள் கடுமையான மழை மற்றும் சேதத்தை சந்தித்துள்ளன.

வெள்ளக்காடான சாலைகள்

பல்வேறு பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் 50 முதல் 60 மைல் வேகத்தில் காற்று வீசி வருவதால் பல இடங்களில் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பலத்த சூறாவளி காற்றுடன் 50 முதல் 60 மில்லி மீட்டர் மழை வரை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்வது குறித்து இருநாட்டு அரசுகளும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே அடுத்ததாக ஹெங்க் என்ற புயல் உருவாகி தற்போது ஜெர்ரிட் புயல் தாக்கிய பகுதிகளை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து உருவாகிய இந்த புயல்களுக்கு ’பாம்போஜெனிசிஸ்’ என்ற வானிலை காரணி காரணம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!

x