திடீரென மூடப்பட்ட ஈபிள் டவர்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்... காரணம் இதுதான்!


ஈபிள் டவர்

உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முதல் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

ஈபிள் டவரில் வேலை செய்யும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது நிர்வாகத்தை எதிராக திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈபிள் டவர் மூடப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.

ஈபிள் டவர் கோபுரம்

உலக அளவில் மிகவும் பிரபலமான இந்த ஈபிள் டவர் கட்டப்பட்டு 134 ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த ஈபிள் டவர், உலகின் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்று ஆகும். இந்த ஈபிள் டவரைக் காண, ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் நிலையில் திடீரென மூடப்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே ஈபிள் டவரை பார்க்க டிக்கெட் எடுத்தவர்களுக்கு வேலை நிறுத்தம் முடிந்த பிறகு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும், அதன் பிறகு ஈபிள் டவரை காண வரும்படி ஈபிள் டவர் நிர்வாகம் சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஈபிள் டவரின் கீழே கண்ணாடியால் மூடப்பட்டுள்ள திறந்தவெளி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஈபிள் டவர் மேலே செல்வதற்கான 300 மீட்டர் பகுதி மட்டுமே மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் வாசிக்கலாமே...

பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!

x