கடும் தாக்குதல் தொடுக்கும் இஸ்ரேல்... காசாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியது


காசாவில் இஸ்ரேல் படையினா் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசாவின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 பேர் உயிரிழந்தனா்; 382 பேர் காயமடைந்தனா்.

காசா மீதான் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்

இத்துடன், கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20,915-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 54,918-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் பலியாகும் காசா குழந்தைகள்

தற்போது காசாவின் அதிக மக்கள் திரள் கொண்ட அகதிகள் முகாமில் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது இஸ்ரேல். நுஸைரத் உள்ளிட்ட நகர்ப்புற அகதிகள் முகாமில் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 1948-ம் ஆண்டில் இஸ்ரேல் உருவானபோது, அந்நாட்டில் இருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் குடியேறிய நகரங்கள் இவை. காசாவில் இதுவரை சுமார் 21 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


x