ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்த மாட்டோம். வரும் நாட்களில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடையும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்
காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கும் வரை போர் நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக அறித்துள்ளார்.
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய படைகளை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளோம். இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்த மாட்டோம். இறுதிவரை போர் நடக்கும். வரும் நாட்களில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடையும். இலக்கை அடையும் வரை போருக்கு முடிவு கிடையாது.
ஹமாஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களை, ராணுவ நடவடிக்கை இல்லாமல் விடுவிக்க முடியாது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களை குறைக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் இதை தடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். பொதுமக்களை ஹமாஸ் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது' எனத் தெரிவித்துள்ளார்
இதையும் வாசிக்கலாமே...