மத்திய நைஜீரியாவில் மத மற்றும் இனப் பதற்றங்களுக்கு மத்தியில் கிராமங்கள் மீதான தொடர் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நைஜீரியாவில் கிராமங்கள் மீது தீவிரவாத அமைப்புகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. மத மற்றும் இனப் போராட்டம் கடந்த சில ஆண்டுகளாக வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில், போக்கோஸ், ஜோஸ் மற்றும் பார்கின் லாடி உள்ளிட்ட கிராமங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அந்த கிராமத்தை சேர்ந்த 113 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தக்கப்பாடம் புகட்டப்படும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.