அமெரிக்காவில் இந்துக் கோயில் சூறை... அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்!


வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

அமெரிக்காவில் இந்துக் கோயில் சூறையாடப்பட்ட சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “தீவிரவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இந்தியாவுக்கு வெளியே இடமளிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்துக் கோயிலில் தாக்குதல்...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுவாமி நாராயண் மந்திர் என்ற இந்துக் கோயில் உள்ளது. இக்கோயிலை நேற்று விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கோயிலுக்கு வெளியே உள்ள பலகையில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்க தலைவரை புகழ்ந்து எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்து மத அபிமானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “கலிபோர்னியாவில் இந்துக் கோயில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது. தீவிரவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இந்தியாவுக்கு வெளியே இடமளிக்கப்படக்கூடாது. கலிபோர்னியாவில் நடந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையிடம் இந்திய தூதரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடைபெறும் என நான் நம்புகிறேன்” என்றார்.

10வது குஜராத் உலகாளவிய எழுச்சி மாநாடு.

காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலைமுயற்சி சதியில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா செக் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், "இது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டால், அவர்கள் நலனுக்காக தூதரக ரீதியான உதவிகளை வழங்குவது வழக்கம்" என்றார்.

10-வது குஜராத் உலகாளவிய எழுச்சி மாநாட்டில் அமெரிக்கா, கனடா பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, "அது குஜராத் மாநில அரசைச் சார்ந்தது. அம்மாநில அரசு யாருக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார்கள் என்பதை பொறுத்தது. எனவே, இது தொடர்பாக குஜராத் மாநில அரசுதான் பதிலளிக்க முடியும்.

குஜராத் உலகாளவிய மாநாட்டில் பங்கேற்க பல நாடுகள் வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்டு வருகின்றன. நாங்கள் அவர்களை குஜராத் அரசை தொடர்பு கொள்ளச் செய்கிறோம். குஜராத் மாநாட்டில் அதிக நாடுகள் பங்கேற்பதை நாங்களும் விரும்புகிறோம்" என்றார் அமைச்சர்.

x