அமெரிக்காவில் மனைவியைக் கொலை செய்த இந்திய வாலிபர்... 9 ஆண்டுகளாக தலைமறைவு: தகவல் தந்தால் 2,50,000 டாலர்கள் பரிசு!


அமெரிக்காவில் தேடப்படும் இந்திய வாலிபர் பத்ரேஷ் குமார்

அமெரிக்காவில் மனைவியைக் குத்திக்கொலை செய்து விட்டு 9 ஆண்டுகளாக தலைமறைவான இந்திய வம்சாவளி வாலிபர் குறித்து தகவல் தருபவர்களுக்கு 2,50,000 டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் நிலம், கன்ட்ரோடி தாலுகா விராம்காம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரேஷ் குமார்(34). இவரது மனைவி பாலக் படேல். புதுமணத் தம்பதிகளான இவர்கள் அமெரிக்காவில் மேரிலாந்தில் உள்ள ஹனோவரில் வசித்து வந்தார்.

பத்ரேஷ் குமார்

அங்கு உள்ள டோனட் கடையில் இருவரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், இரவு வேலை முடிந்து குடும்பத்தினருடன் பாலக் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் இந்தியா வர விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2015 ஏப்ரல் 12-ம் தேதி தனது மனைவி பாலக்கை பணியிடத்தில் பத்ரேஷ் குமார் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதன்பின் அருகில் உள்ள அவரது குடியிருப்புக்குச் சென்று உடைகளை மாற்றிக்கொண்டு தனது பாஸ்போர்ட் மற்றும் பணத்தை எடுத்துக் கொண் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு காரில் பத்ரேஷ் குமார் சென்றுள்ளார். மறுநாள் காலை 10 மணியளவில் ஓட்டலில் இருந்து அவர் தப்பிச் சென்றார்.

இந்த கொலை வழக்கு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், பத்ரேஷ் குமாரை தேடத் துவங்கினர். இந்த நிலையில், யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றம், பத்ரேஷ் குமாருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. ஆனாலும் பத்ரேஷ் குமார் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில். தேடப்படும் கொலைக்குற்றவாளியான பத்ரேஷ் குமார் குறித்து தகவல் தருபவர்களுக்கு 2,50,000 டாலர்கள் (ரூ. 3 கோடி) சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(எஃப்பிஐ) அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் மனைவியை கொலை செய்த இந்திய இளைஞர் 9 ஆண்டுகளாக தேடப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x