'அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர்'... தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல்!


டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப்க்கு தகுதி இல்லை என கூறி, அவருக்கு தடைவிதித்த அந்நாட்டு நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலராடோ நீதிமன்றம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (77). இவர் கடந்த 2017 முதல் 2021 வரை குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் கடந்த 2021 ஜனவரி 6-ம் தேதி அன்று வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட காய்களை நகர்த்தி வருகிறார்.

எப்பிஐ

இந்நிலையில் 2021 ஜனவரி 6-ல் நடந்த நாடாளுமன்ற வன்முறை வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என்றும், அவரது பெயரைத் தேர்தல் வாக்குச்சீட்டில் குடியரசு கட்சி சேர்க்க கூடாது என்றும் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில், அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிட முடியாதவாறு தடைவிதித்து உத்தரவிட்ட கொலராடோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொலராடோ நீதிமன்றத்தில் பணியாற்றும் உயர் அலுவலர் லிசா மொனாகோ கூறுகையில், “விசாரணை அமைப்புகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோருக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன. எப்பிஐ அதிகாரிகள், நீதிபதி, அதிபர் பதவிக்கான 3 வேட்பாளர்கள் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்குளை எப்பிஐ விசாரித்து வருகிறது" என்றார்.

x