ரஷ்ய அதிபர் தேர்தல் - விளாடிமிர் புதினுக்கு எதிராக களமிறங்கினார் பெண் ஊடகவியலாளர்!


ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவரும், பெண் ஊடகவியலாளருமான எகாதேரினா தன்சோவா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ரஷ்யாவில் கடந்த 1999ம் ஆண்டு அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகவே, தற்காலிக அதிபராக விளாடிமிர் புதின் பதவி ஏற்றார். இதையடுத்து 2000ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக புதின் பொறுப்பேற்றார். தற்போது அதிபராக உள்ள புதினின் பதவி காலம் 2024ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது.

எகாதேரினா தன்சோவா

இந்த நிலையில் விளாடிமிர் புதின் 2036ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்க வழி செய்யும் வகையிலும், இன்னும் 2 முறை தேர்தலில் போட்டியிடும் வகையிலும் ரஷ்ய அரசியலமைப்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக 4 முறையாக அதிபராக இருக்கும் புதின் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

எகாதேரினா தன்சோவா

இதையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புதின் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கான ஆவணங்களை புதின் சார்பில் ரஷ்ய தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட போருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவரும், பெண் ஊடகவியலாளருமான எகாதேரினா தன்சோவா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ரஷ்யாவில் பலம் வாய்ந்த புதினுக்கு எதிராக ஒரு பெண் ஊடகவியலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி | நாளை முதல் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!

x