ரூ.1250 கோடி மோசடி செய்த பெண் தொழிலதிபர் கைது!


தொழிலதிபர் டிராங் மை லான்

12.5 பில்லியன் டாலர் மோசடி செய்த வழக்கில் வியட்நாம் பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் டிராங் மை லான்

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிராங் மை லான், தனிப்பட்ட நோக்கங்களுக்காக 12.5 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய குடும்பம் வியட்நாம் நாட்டின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். 2022 மதிப்பீடுகளின்படி, டிராங்கின் சட்டவிரோத சொத்துக்கள் வியட்நாமின் மொத்த ஜிடிபியில் மூன்று சதவீதம் என்று கூறப்படுகிறது.

சைகோன் கொமர்ஷல் வங்கியின் (எஸ்சிபி) 90 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டிராங், போலி கடன் விண்ணப்பங்கள் மூலம் வங்கியில் இருந்து பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பிப்ரவரி 9, 2018 முதல் அக்டோபர் 7, 2022 வரை, அவர்கள் 916 போலி கடன் விண்ணப்பங்கள் மூலம் அவர் 12.5 பில்லியனை மோசடி செய்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மோசடி, லஞ்சம் மற்றும் வங்கி விதிமுறைகளை மீறியதாக டிராங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், 5.2 மில்லியன் டாலர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக முன்னாள் வியட்நாம் வங்கி அதிகாரி உட்பட சுமார் 85 பேர் ஹோ சி மின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளனர்.

இந்த நிலையில், டிராங் மை லான் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஊழல் குறித்த வழக்கு ஹோ சி மின் நகர மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும், விசாரணை எப்போது தொடங்கும் என்பதைக் குறிப்பிடாமல் அரசாங்க இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!

x