அமெரிக்க அதிபருக்கான குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி இரண்டாம் இடத்திற்கு முந்தியிருக்கிறார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 2024ம் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார். இதற்கான உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியினரிடையே தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்கா முழுவதும் பயணித்து குடியரசு கட்சியினரை சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
விவேக் ராமசாமிக்கு குடியரசு கட்சியினரிடையே ஆதரவு மெல்ல அதிகரித்து வருவதாக சிஎன்என் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கருத்து கணிப்பின்படி டொனல்ட் டிரம்பிற்கு குடியரசு கட்சியின் 39% உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. விவேக் ராமசாமி தற்போதைய நிலையில் 13% ஆதரவுடன் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வம்சாவளி போட்டியாளரான நிக்கி ஹேலே 12% ஆதரவுடன் 3-வது இடத்திலும், நியூ ஜெர்சியின் முன்னாள் கவர்னர் கிருஸ் கிறிஸ்டி 11% ஆதரவுடன் 4-வது இடத்திலும் உள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.