இஸ்ரேல் -காசா போர், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விவாதித்தார்.
கடந்த அக். 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஐநா பொதுச் சபையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் காசாவில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஆனால் அதன்பின்னர் முன்னை விட வேகமாக போரை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். எனவே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் இப்போது இஸ்ரேலை கண்டிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். இந்த உரையாடலில் போர் குறித்தும், கடல்வழி போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும் இந்தியா தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சமீப நாட்களாக அரபு நாடுகளை ஒட்டியுள்ள செங்கடல் வழித்தடத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நீண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்களை அவர்கள் கடத்தி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கடல் போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. இந்நிலையில்தான் பிரதமர் மோடி, நெதன்யாகு உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்
விவாகரத்து ஆனதும் மகனைத் தத்துக் கொடுத்த சின்னத்திரை நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!
கலக்கல் வீடியோ... விஜய் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட தேவதர்ஷினி!
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா... சிறப்பு ஏற்பாடுகள் தயார்!
ஷாக்... தேநீர் கொண்டு வர தாமதம்: மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த கொடூர கணவர்!