எகிப்து நாட்டின் அதிபா் தேர்தலில் தற்போதைய அதிபா் அப்தெல் ஃபத்தா அல்-சிசி மூன்றாவது முறையாகத் அமோக வெற்றிபெற்றுள்ளாா். தேர்தலில் அவருக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
எகிப்து நாட்டின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 10 முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அதன்படி, அல்-சிசிக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டின் அதிபராக அவா் 3-வது முறையாக பதவியேற்கவிருக்கிறாா்.
எகிப்தில் நடந்த அதிபர் தேர்தலில் 6 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிப்பதற்காக 9 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் அல்-சிசி, லிபரல் வாஃபட் கட்சியின் அப்தெல் சனத் யமாமா, குடியரசுக் கட்சியின் ஹசெம் ஓமர், எகிப்திய ஜனநாயகக் கட்சியின் ஃபரித் சஹ்ரான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
நான்குமுனை போட்டி நிலவினாலும், அல்-சிசிதான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவாா் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது. அவரது வெற்றிக்கு பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைப் பேணி வரும் அல்-சிசி, மனித உரிமை மீறல்களிளும், அரசியல் எதிரிகளை நசுக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாக விமா்சிக்கப்பட்டு வருகிறாா்.
இதையும் வாசிக்கலாமே...
5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு!
ராமர் கோயில் திறப்பு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்கவில்லை; என்ன காரணம்?
ஸ்ரீவைகுண்டம்: 3வது நாளாக ரயிலுக்குள் 500 பயணிகள் தவிப்பு; மீட்க வந்தது ஹெலிகாப்டர்கள்!
111 பேர் பலியான பரிதாபம்... சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் இம்சை... இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்தே இளசுகளை எச்சரித்த போலீஸார்