கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் தன்பாலின தம்பதிக்கு ஆசிர்வாதம் வழங்க அனுமதி உண்டா என்ற கேள்வி அண்மையில் எழுந்தது. இந்த நிலையில், தன்பாலின தம்பதியருக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்கு போப் பிரான்சிஸ் முறைப்படி அனுமதி அளித்தார்.
வாடிகனின் கொள்கையில் மாற்றங்கள் என்ற புதிய ஆவணத்தில், கடவுளின் அன்பையும், கருணையையும் பெற விரும்பும் மக்களை தடுக்கக்கூடாது என்ற நோக்கில் தன்பாலின தம்பதியருக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்கு போப் பிரான்சிஸ் முறைப்படி அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்டிகன் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், திருமணத்தில் சில சடங்குகளைக் குழப்பாமல் இருந்தால் தன்பாலின தம்பதிகளுக்கு பாதிரியார்கள் ஆசிர்வாதம் வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி போப் பிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கையில், “கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள் மத்தியில் திருமணத்தின் சடங்குடன், மற்ற சடங்கை குழப்பாமல் இருந்தால், சில சூழ்நிலைகளில் ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசிர்வாதங்களை வழங்கலாம். அதே சமயம் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வாழ்நாள் சடங்கு என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
எனவே, திருமண நடைமுறைகளுடன் ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசிர்வாதங்களை வழங்கக்கூடாது. அதற்காக அத்தகைய ஆசிர்வாதங்களுக்கான கோரிக்கைகளை முழுவதுமாக மறுக்கவும் கூடாது. ஒரு ஆசிர்வாதம் மக்களுக்கு கடவுள் மீது நம்பிக்கையை அதிகரிப்பதற்கான வழியை வழங்குகிறது. எனவே, இது நாம் வாழும் உலகில் சிறிய விஷயமல்ல. இது பரிசுத்த ஆவியின் விதை, அது வளர்க்கப்பட வேண்டும், தடுக்கப்படக்கூடாது” என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு!
ராமர் கோயில் திறப்பு விழா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்கவில்லை; என்ன காரணம்?
ஸ்ரீவைகுண்டம்: 3வது நாளாக ரயிலுக்குள் 500 பயணிகள் தவிப்பு; மீட்க வந்தது ஹெலிகாப்டர்கள்!
111 பேர் பலியான பரிதாபம்... சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் இம்சை... இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்தே இளசுகளை எச்சரித்த போலீஸார்