‘வாட்ஸ்-அப்’ல அசத்தலான வசதி... உடனே அப்டேட் பண்ணுங்க!


வாட்ஸ் - அப் செயலியில் வந்திருக்கும் புதிய அப்டேட், பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வாட்ஸ்-அப் சேனல் நிர்வகிப்பவர்களுக்கு இந்த புதிய வசதி, தங்களது சேனல் ஃபாலோயர்களை அதிகரிக்கவும், தங்களது சேனல்களை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றவும் வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ஆட்டோமேட்டிக் ஆல்பம் கிரியேஷன் வசதி பெருமளவு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்

வாட்ஸ்- அப்பின் அம்சங்களைப் பற்றி தகவல்களை வெளியிடும் WABetaInfo இந்த புதிய அப்டேட் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது. இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாட்ஸ் அப் சேனல்களை நிர்வகிப்பவர்கள், தங்களது சேனல்களில் பகிரப்படும் மீடியா ஃபைல்களை ஒழுங்கமைப்பதை இனி எளிதாகச் செய்ய இயலும். சேனல்களில் ஷேர் செய்யப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் இனி தனியே ஆல்பத்தில் சேமிக்கப்படும்.

சேனல்களைப் ஃபாலோ செய்யும் பயனர்கள், இனி நேரடியாக இந்த ஆல்பத்திற்குச் சென்று புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்வையிட முடியும். வாட்ஸ் - அப் சேனலை நிர்வகிப்பவர், சேனலில் பகிரும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாட்ஸ் - அப் இனி தானாகவே ஒன்று சேர்த்து தனி ஆல்பமாக ஒழுங்கமைத்து, ஃபாலோயர்களுக்கு காட்டும்.

வாட்ஸ் அப்

இந்த புதிய அம்சம் ஏற்கெனவே வாட்ஸ்-அப்பின் தனிப்பட்ட சாட்களிலும், க்ரூப்களிலும் இருந்து வருகிறது. தற்போது வாட்ஸ்-அப் சேனல்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ்- அப் செயலியை அப்டேட் செய்யும் ஆன்ட்ராய்டு பயனர்கள் இந்த வசதியை பெற முடியும்.


இதையும் வாசிக்கலாமே...

x