பாகிஸ்தானில் இன்று காலையில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் இன்று காலை ராஜன்பூர் நகரில் 11:38 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி முறையே அட்சரேகை: 29.32°S மற்றும், தீர்க்கரேகை: 70.12°W எனவும் கண்டறியப்பட்டது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.
இதற்கு முன்னதாக பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் கடந்த டிசம்பர் 15ம் தேதி காலையில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குவெட்டாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேபோல அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
‘அவரை எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும்...' ஆவேசமாக பதிலளித்த பிரேமலதா!
வெள்ளக்காடாக மாறிய கன்னியாகுமரி; தண்ணீரில் மிதக்கும் தென் தமிழகம்!