காதலியுடன் பில் கேட்ஸ் உற்சாக நடனம்... வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!


காதலியுடன் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான பில் கேட்ஸ் தனது காதலியான பவுலா ஹர்ட் உடன் வேகாஸில் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

கடந்த 2021ல் மெலிண்டா பிரெஞ்ச், பில் கேட்ஸிடமிருந்து விவாகரத்து செய்தபின், மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரியின் மனைவி பவுலா ஹர்ட்டை பில்கேட்ஸ் விரும்புகிறார் என்று செய்திகள் வெளியானது.

இந்த ஜோடி, ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து, வந்தது. அண்மையில் லாஸ் வேகாசில் நடைபெற்ற ஓட்டலின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டதுடன், பாப் நட்சத்திரம் ஜஸ்டின் டிம்பர்லேக்கின் நேரடி நிகழ்ச்சியை அனுபவித்தனர். பின்னர் ஜஸ்டின் டிம்பர்லேக்கின் இசைக்கு பில் கேட்ஸ் மற்றும் காதலி பவுலா ஹர்ட் நடனமாடுகின்றனர்.

பொதுவாகத் தீவிரமான நடத்தைக்கு பெயர் பெற்றவர், பில் கேட்ஸ். இந்த நிகழ்வில் தனது கம்பீரமான நடன அசைவுகளால் பார்வையாளர்களை நடனமாடி திகைக்க வைத்தார். இருவரும் தெளிவாக ரசித்து நடனம் ஆடினர். அவர் பவுலாவை நெருங்கி இழுப்பதும், காதலி பவுலாவும் பதிலுக்கு ஒரு அணைப்பை தருவதாக அந்த நடனம் மிகுந்த ரொமான்ஸை வெளிப்படுத்தியது.

பிஸியான பிசினஸ் அதிபர்களான இருவரின் இந்த கலகலப்பான மற்றும் கவலையற்ற நடத்தையால் இணையம் கமெண்ட்களால் களை கட்டுகிறது.

இதையும் வாசிக்கலாமே...
ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!

ஒரே நாளில் ரூ.192 கோடி வருமானம்: பத்திரப்பதிவுத்துறை தகவல்

கருகலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப்பதிவு

x