கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!


கேளிக்கை விடுதி தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

துருக்கியின் பிரபலமான நகரங்களில் ஒன்றாக இஸ்தான்புல் அருகே பெசிக்டஸ் நகரில் பாரம்பரிய சின்னங்கள், பண்பாட்டு மையங்கள், சர்வதேச பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை உள்ளன. அங்குள்ள 16 மாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இரவுநேர மதுபான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது.

புனரமைப்பு பணிகளுக்காக விடுதி மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு 16 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அங்கிருந்த மது பாட்டில்களில் பற்றியதால் மேலும் மளமளவான பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கி ஏறத்தாழ 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 8 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 7 பேர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக கூறப்பட்டு உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக சிலரை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x