பின்லாந்து பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவன் உயிரிழந்தார். மேலும் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 12 சிறுவனை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்லாந்தின் ஹெல்சின்கியின் புறநகரான வந்தாவில் வியர்டோலா பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு 800 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், இப்பள்ளியில் 90 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் இன்று நுழைந்த சிறுவன் சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை சுற்றி வளைத்தனர். அவர் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய 12 வயது சிறுவனை கைது செய்து எதற்காக சுட்டார் என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் மாரி ரான்டனென் தனது எக்ஸ் தளத்தில், "அதிர்ச்சியூட்டும் விதத்தில் இன்றைய நாள் தொடங்கியது. வந்தாவில் உள்ள வியர்டோலா பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. பல குடும்பங்கள் இப்போது அனுபவிக்கும் வலியையும், கவலையையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பெட்டேரி ஓர்போ தனது பதிவில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், காவல்துறையின் கூடுதல் தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஒரு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!
முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!
‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்
காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?