சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
170 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது.
இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று தினங்களாக, அதாவது ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமை ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையான அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு துவங்குகிறது!
அதிர்ச்சி... எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!
விஜய் முதல் குஷ்பு வரை.... திரையுலகில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்!
200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்
19 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்... அறுவை சிகிச்சைக்கு பின்பு நேர்ந்த துயரம்!