போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு குறைகிறது... ஜோ பைடனிடம் கவலை தெரிவித்த ஜெலன்ஸ்கி!


உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு

ரஷ்யாவுடனான போரில் தங்களுக்கான ஆதரவை அமெரிக்கா தொடர வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தினார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்தார். அப்போது ரஷ்யாவுடனான போர் நிலவரம் குறித்து பைடனிடம் அவர் எடுத்துரைத்தார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும், உக்ரைன் ராணுவத்துக்கு உடனடியாக தேவைப்படும் உதவிகள் குறித்து பைடனிடம் ஜெலன்ஸ்கி விளக்கினார். மேலும், சமீப காலமாக உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு குறைந்து வருவது கவலையளிக்கிறது. போரில் அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு தொடர வேண்டும் என வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, அமெரிக்க உதவியின் முக்கியத்துவம் குறித்தும் பைடனிடம் எடுத்துரைத்தார்.

“ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெறும் வகையில் உக்ரைன் ராணுவம் வலுவாக உள்ளது” என தெரிவித்த ஜெலன்ஸ்கி, உக்ரைனின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் சைபர் தாக்குதலுக்குள்ளாகி, மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் மற்றும் இன்டர்நெட் வசதி துண்டிக்கப்பட்டு முடங்கியுள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அமெரிக்க அதிபர் பைடனிடம் இந்த சந்திப்பின்போது ஜெலன்ஸ்கி எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோபைடன் - ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு பிறகு, டோன்ட்ஸுக் (ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பகுதி) வடமேற்கில் உள்ள அவ்டிவ்கா நகரில் ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளதாக உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

x