19 வயதில் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்; நெட்டிசன்கள் அதிர்ச்சி


19 வயதில் உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்

பிரேசில் நாட்டின் சமூக வலைதள பிரபலமாக இருந்து வந்த மரியா சோபியா என்பவர் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் அவரை பின்தொடர்ந்து வந்த நெட்டிசன்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் சமூக வலைதள பிரபலமாக இருந்தவர் மரியா சோபியா வலிம். இவர் உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்ததால் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். இவர் தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்டுகள் குறித்தும் பதிவிட்டு வந்ததால் நல்ல வருமானம் கிடைத்து வந்தது. இவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மரியா சோபியா

இந்நிலையில் 19 வயதேயான இவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு வேறொருவர் கல்லீரல் வழங்கியதால் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. அதன் பின்னர் அவர் உடல்நலம் தேறி வர வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

மரியா

இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்திற்குள் மரியா பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தந்தை காசியா பகுதியில் மேயராக இருக்கும் நிலையில், அவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதையடுத்து சோபியாவின் மரணத்திற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... காதல் தோல்வியால் தீக்குளித்த கல்லூரி மாணவி!

x