ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (டிச.11) காலை 7.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இல்லை.
முன்னதாக, கடந்த அக்டோபா் 7-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) 4.8 ரிக்டர் அளவிலும், நேற்று (திங்கள்கிழமை) 4.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்றும் (டிசம்பர் 12) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சத்திலும், கலக்கத்திலும் உறைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!
ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு...விசாரணைக்குச் சென்றவர் வெட்டிக்கொலை!
அதிரடி... விதிகளை மீறியதாக 350 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!
அதிகாலையில் பெரும் சோகம்... ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்த தண்ணீர்... அலறியடித்து ஓடிய மக்கள்!
2023-ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது... இவைதான்!