கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் பிரிட்டன் பிரதமா்!


ரிஷி சுனக்

கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா்.

கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ் ஜான்சன் எடுத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தாா்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போரீஸ் ஜான்சன் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தாா். மேலும், கொரோனா பேரிடா் காலத்தில் அரசு எடுத்த கடுமையான முடிவுகளால் பாதிக்கப்பட்டவா்களிடமும், கொரோனாவால் சொந்தங்களை இழந்த குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொண்டுள்ளோம். அது வருங்காலத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் என்று ரிஷி சுனக் தெரிவித்தாா்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!

x