ரஷ்யா ராணுவம் மட்டுமின்றி உக்ரைன் ராணுவத்திலும் தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருப்பதாக நேபாள பிரதமர் கமல் தஹல் பிரசண்டா கூறியுள்ளார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காக சண்டையிட்ட நேபாள நாட்டைச் சேர்ந்த 6 பேர் அந்தப் போரில் உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
இந்த சூழலில் இது குறித்து பேசிய நேபாள பிரதமர் கமல் தஹல் பிரசண்டா, “ரஷ்ய ராணுவத்தில் 200க்கும் மேற்பட்ட நேபாள நாட்டவர்கள் பணியாற்றி வருவதாக எங்களுக்கு ஏற்கெனவே தகவல்கள் வந்தன.
ஆனால், ரஷ்யா மட்டுமின்றி உக்ரைன் ராணுவத்திலும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவது தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் உண்மைகளை அறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார் அவர்.
இதற்கிடையே, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ராணுவங்களில் பணியாற்றுவதற்காக தங்கள் நாட்டவர்களை அரசு சார்பில் அனுப்புவதில்லை என்றும், வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நேபாளிகள் தாங்களாகவே அந்த நாடுகளின் ராணுவத்தில் இணைவதாகவும் நேபாள அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...