ஆப்கானிஸ்தானில் இன்றும் நிலநடுக்கம் - பீதியில் உறைந்த மக்கள்!


ஆப்கானிஸ்தானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலையிலும் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது .

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அடிக்கடி பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில் இன்று பைசாபாத்தில் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கமானது ஃபைசாபாத்தில் இருந்து 151 கிலோ மீட்டர் தெற்கு - தென்கிழக்கில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

அதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடரும் நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தான் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x