காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியாவின் துணை வெளியுறவுத்துறை மந்திரி கிம்சன் கியோங் கூறுகையில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த தனது கூட்டாளியான இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்" என்று கூறியுள்ளார்.