[X] Close

கண்ணாமூச்சி ஆட்டத்தை வங்கிக்கொள்ளை என்று நினைத்த போலீஸ்: பிரிட்டனில் சுவாரசியம்


britain-police-incident

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 18:34 pm
  • அ+ அ-

பிரிட்டனின் பர்மிங்கம் நகரில் சுவாரசியம் சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. வங்கியில் கொள்ளையடிக்கப்படுவதாக வந்த தொலைப்பேசி அழைப்பை நம்பி வங்கிக்குள் நுழைந்த போலீஸ், அங்கு ஊழியர்கள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.

வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் காவல்துறையைச் சேர்ந்த டேவ் கீன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

"பர்மிங்கமில் இன்று வங்கி ஒன்றில் கொள்ளை ஒன்று நடப்பதாக சந்தேகப்பட்டு எங்களை அழைத்த நபருக்கு நன்றி. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு சென்றது. மேஜைகளுக்கு அடியில் வங்கி ஊழியர்கள் மறைந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். 

ஊழியர்களுக்குள் ஒற்றுமையை வளர்க்க, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. (ஆனால், சந்தேகத்தின் பேரில்) எங்களை அழைத்தது சரியான நடவடிக்கையே" என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு, பிரபலமாகி, வழக்கம் போல நெட்டிசன்கள் இதை வைத்து பல கற்பனைகளையும், கலாய்ப்புகளையும் தட்டிவிட ஆரம்பித்துவிட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close