அமெரிக்க பெண்ணுடன் உறவு... மாயமான சீன முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சித்திரவதை செய்து கொலை?


கின் கேங்

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் கேங் சில மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் கின் கேங். கடந்த டிசம்பர் மாதம் தான் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், கடந்த ஜூன் மாதம் இவர் திடீரென மாயமானார். பொது நிகழ்ச்சிகளிலும் இவரைப் பார்க்க முடியவில்லை.

அவரை பற்றி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத சீனா திடீரென கடந்த அக். மாதம் வாங் யீ என்பவரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்தது. பல காலமாக கின் கேங்கிற்கு என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்த நிலையில், இப்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

கின் கேங்

கின் கேங் கடைசியாக ஜூன் 25ஆம் தேதி நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. சீன சமூக வலைத்தளங்களிலும் அவரை பற்றிய அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டது. யாராவது புதிதாகப் பதிவிட்டாலும் அவை உடனுக்கு உடன் கண்காணிக்கப்பட்டு நீக்கப்பட்டது. அதாவது சீனாவில் இணையத்தில் அவரை பற்றி எங்குத் தேடினாலும் எந்தவொரு தகவலும் தெரியாது என்ற நிலை உருவானது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமான நபராக இவர் அறியப்பட்ட நிலையில், திடீரென இவர் மாயமானது சர்ச்சையானது. இதற்கிடையே கடந்த செப். மாதம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. அதாவது கின் கேங் 2021-2023 காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான சீன தூதராக இருந்தார். அப்போது அமெரிக்கப் பெண் ஒருவருடன் அவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும் அதில் அவருக்குக் குழந்தையும் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கின் கேங்

இந்த விவகாரம் தெரிந்த உடனேயே சீனா அவரை ஒரம்கட்டிவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதமே இது குறித்து சீன அதிகாரிகள் விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவர் அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த நிலையில், அவர் சீனாவின் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு தேசியப் பாதுகாப்பில் சமரசம் செய்தாரா இல்லையா என்பது விசாரணையாக இருந்தது. இது ஒரு பக்கம் நடந்தாலும் கின் கேங் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் வராமல் இருந்தது.

சீனா விரித்த "மாய வலை.." கடைசி நொடியில் இத்தாலி எடுத்த முடிவு.. என்ன தான் நடக்கிறது? பகீர் பின்னணி

இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கின் கேங் தற்கொலை அல்லது சித்திரவதையால் கடந்த ஜூலை மாதமே இறுதியில் உயிரிழந்தாக சீன அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கின் உயிரிழந்துள்ளார். இந்த மருத்துவமனையில் தான் பொதுவாகச் சீனாவின் முக்கிய தலைவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்: பொதுவாகச் சீனாவில் உயர் பதவிகளில் இருப்போர் இதுபோன்ற திருணத்திற்கு மீறிய உறவில் இருந்தது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சீனா அவரை பற்றி இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

x