இயற்கை பேரழிவு... இந்தியா சார்பில் 8 கோடி நிவாரண நிதி!


பப்புவா நியூ கினியா எரிமலை

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்கு நிவாரண நிதியாக இந்தியா சார்பில் எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியா தீவு

பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், 26,000 க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பிராந்தியத்தில் அவசர மனிதாபிமான தேவைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் அழிவுகளுக்காக பப்புவா நியூ கினியா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

மேலும் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சேதம் மற்றும் அழிவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி) இந்தியா அறிவித்துள்ளது.

எரிமலை

மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் " இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் கீழ் நெருங்கிய நண்பர் மற்றும் மேம்பாட்டு கூட்டாளராக இருக்கும் பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளின் நட்பு மற்றும் மக்களிடையேயான ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக பப்புவா நியூ கினியாவில் புனரமைப்பு முயற்சிகளுகு உதவும் வகையில் இந்திய அரசாங்கம் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் ஆதரவுக்காக உடனடி நிவாரண தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது" என்று தெரிவித்துள்ளது.

மேலும் "2018ல் நிலநடுக்கம் மற்றும் 2019ல் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் நெருக்கடி மற்றும் பேரழிவுகளின்போது இந்தியா பப்புவா நியூ கினியாவுடன் உறுதியாக நிற்கிறது" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

x