[X] Close

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. சிங்கப்பூரை வீழ்த்தி முன்னேறியது ஜப்பான்


japan-passport-dethrones-singapore-as-world-s-most-powerful

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 16:37 pm
  • அ+ அ-

ஹென்லே இன்டக்ஸ் Henley Index என்ற நிறுவனம், ஆண்டுதோறும் எந்த நாட்டின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற கணக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஜப்பான் முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர் தக்க வைத்திருந்த இடத்தை இப்போது ஜப்பான் பிடித்திருக்கிறது. விசா இல்லாமல் பிற நாடுகளுக்குச் செல்லும் அனுமதியை வழங்குவதின் அடிப்படையில் இந்த தர வரிசை தயார் செய்யப்படுகிறது.
ஜப்பான் நாடு உலகில் 190 நாடுகளுக்கு விசா ஃப்ரீ பயணத்தை அங்கீகரித்துள்ளது. கடைசியாக மியான்மாருக்கு விசா நடைமுறையை ஜப்பான் தளர்த்தியது. இதனால் சிங்கப்பூரை வீழ்த்தி இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

சிங்கப்பூர் 2-வது இடத்தில் உள்ளது. 189 நாடுகளுக்கு விசா ஃப்ரீ பயணத்தை சிங்கப்பூர் அங்கீகரித்துள்ளது. 3-வது இடத்தில் ஜெர்மணி, பிரான்ஸ், தென் கொரியா (188), 4-ம் இடத்தில் டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, 5-ம் இடத்தில் லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரியா, போர்சுகல், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் இருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் உள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close