உலகின் முதல் நான்காம் தலைமுறை அணு உலையை தொடங்கியது சீனா!


சீனாவின் நான்காம் தலைமுறை அணு உலை

உலகின் முதல் நான்காம் தலைமுறை அணு உலையை சீனா தொடங்கியிருப்பதாக அந்நாட்டு அரசின் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.

உலகின் அடுத்த தலைமுறைக்கான, வாயு வாயிலாக குளிரூட்டப்படும் அணு உலை மின் நிலையத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகளை சீனா தொடங்கி உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் இன்று வெளியாகி உள்ளன.

அணு உலை மாதிரி

நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் சீனா கடந்த பல வருடங்களாக முயன்று வருகிறது, இந்த முயற்சியில் தற்போது அந்நாடு வெற்றியும் கண்டுள்ளது.

கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷிடாவ் விரிகுடா ஆலையானது, அழுத்தப்பட்ட நீரை விட வாயுவால் குளிரூட்டப்பட்ட இரண்டு உயர் வெப்பநிலை உலைகளால் இயக்கப்படுகிறது என்று சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இது மிகவும் செயல்பாட்டுத் திறன் வாய்ந்தது மற்றும் செலவு குறைந்தது எனவும் சீனா பெருமிதம் கொள்கிறது.

வழக்கமான அணு உலைகள், அணு ஆற்றலில் இருந்து பல சிக்கலான மற்றும் எச்சரிக்கைக்கு உரிய செயல்பாடுகள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால், எஸ்எம்ஆர் என்றழைக்கப்படும் சிறிய ரக மட்டுப்படுத்தப்பட்ட உலைகள், மேம்பட்ட மாதிரிகளாக அறியப்படுகின்றன. வெப்பமாக்கல், உப்புநீக்கம் அல்லது தொழில்துறை தேவைகளுக்கான நீராவி உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்கும் இவற்றை பயன்படுத்தலாம்.

வழக்கமான அணு உலை

கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும், மேற்கத்திய நாடுகளுடனான பதற்றங்களின் பின்னணியில், நிலக்கரி வாயிலான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், அவை கோரும் வெளிநாட்டு தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் சீனா வெகுவாய் முயன்று வந்தது. அவற்றில் பெருவாரியாக வெற்றியும் கண்டுள்ளது.

ஷிடாவ் பே ஆலையின் உபகரணங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவின் சுதேசி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் உருவானவை. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தரவின்படி, 18 நாடுகளில் சுமார் 80 எஸ்எம்ஆர் அணு உலைத் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வந்தபோதும், சீனா அவற்றை முந்திக்கொண்டு புதிய சாதனை படைத்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை செங்கல்பட்டு மாவட்டத்திலும் 6 தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டாஸ்மாக் திறந்திருக்கு; ஆனா பால் கிடைக்கல... கொந்தளிக்கும் சென்னை மக்கள்

x