மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான், தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விண்வெளியியின் சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாக ஈரான் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார்.
500 கிலோ எடை கொண்ட அந்த விண்கலனில் என்ன விலங்கு, எத்தனை அனுப்பப்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை.
ஈரான் 2013-ல் விண்கலன் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று வரச் செய்ததாகத் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில், தரவுகளைச் சேகரிக்கும் செயற்கைக்கோள் ஒன்றினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகத் தெரிவித்தது. விரைவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
நாளை செங்கல்பட்டு மாவட்டத்திலும் 6 தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
டாஸ்மாக் திறந்திருக்கு; ஆனா பால் கிடைக்கல... கொந்தளிக்கும் சென்னை மக்கள்
புது மாப்பிள்ளை கத்தியால் 20 முறை குத்திக்கொலை!
தேன் கூட்டுக்கு தீவைக்க சொன்ன தலைமையாசிரியர்; பற்றி எரிந்த மாணவன் உயிருக்குப் போராட்டம்
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்... பெண்கள் முன்னால் அழுத அதிபர் கிம் ஜாங் உன்!