பிரதமர் மோடிக்கு கவுரவம்... பூடானின் மிக உயரிய விருது வழங்கப்பட்டது!


'ஆர்டர் ஆஃப் தி ட்ருக் க்யால்போ' விருதுடன் பிரதமர் மோடி

பூடானின் மிக உயர்ந்த சிவில் விருதான 'ஆர்டர் ஆஃப் தி ட்ருக் க்யால்போ' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் மன்னர் இன்று வழங்கி கவுரவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பூடானுக்கு இன்று காலை சென்றார். அங்கு பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பூடானின் மிக உயர்ந்த சிவில் விருதான 'ஆர்டர் ஆஃப் தி ட்ருக் க்யால்போ' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு பூட்டான் மன்னர் இன்று வழங்கினார். இந்த கவுரவத்தைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.

இந்த விருதானது வாழ்நாள் முழுவதும் சிறந்த சாதனைகள் மற்றும் சமூகத்துக்கு அளித்த பங்களிப்புகளை குறிப்பதற்காக வழங்கப்படுகிறது.

'ஆர்டர் ஆஃப் தி ட்ருக் க்யால்போ' விருது இதுவரை, நான்கு புகழ்பெற்ற நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டில் பூடானின் ராணி பாட்டி ஆஷி கேசாங் சோடன் வாங்சுக், அதே ஆண்டில் பூடானின் மத்திய மடாலய அமைப்பின் 68வது தலைமை மடாதிபதி (ஜே கென்போ) ஜே திரிஸூர் டென்சின் டென்டுப், கடந்த 2018ம் ஆண்டில் ஜே கென்போ ட்ருல்கு நாகாங் ஜிக்மே சோய்ட்ரா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அர்விந்த் கேஜ்ரிவாலால் மிகவும் வருத்தப்படுகிறேன்.... மனம் திறந்தார் குருநாதர் அன்னா ஹசாரே!

நடிகை மகாலட்சுமிக்கு நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ரவீந்தர்!

x