நைஜீரியாவில் ட்ரோன் மூலமாக ராணுவம் நடத்திய தவறுதலான தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனா்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் ராணுவத்தின் தவறால் சுமார் 90 பேர் உயிரிழந்தனர். இராணுவ ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னர், இதுவரை 85க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள். ராணுவ ஆளில்லா விமான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு கடுனாவில் நடந்த இந்த கொடிய தவறுக்குப் பிறகு, நைஜீரிய ராணுவத் தலைமை லெப்டினன்ட் ஜெனரல் டாரைட் லக்பாஜா துன்டுன் பிரி கிராமத்திற்குச் சென்று விமானத் தாக்குதலுக்கு மன்னிப்புக் கேட்டார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் கடுனா மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார். சிலரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர்களின் நலன்கள் மற்றும் பிற வசதிகளை கவனித்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கடுன் மிகவும் குழப்பமான பகுதி. தலைநகர் அபுஜாவிலிருந்து 163 கிமீ தொலைவில் உள்ளது. பல ஆயுதக் கும்பல்களால் கடத்தல் மற்றும் கொலைகளால் இந்த பகுதி கலக்கமடைந்துள்ளது. இவ்வாறான நிலையில், வான்வழித் தாக்குதல் மூலம் இந்தக் கும்பல்களை ஒழிக்க பாதுகாப்புப் படையினர் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக, வடமேற்கு நைஜீரியாவில், ராணுவத்தின் ஆளில்லா விமானம் மூலம், ஒரு மத கூட்டம் குறிவைக்கப்பட்டது.
ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு முன், விமான ரோந்துப் துருப்புக்கள் அந்த இடத்தில் ஒரு குழுவைக் கண்டதாகவும், கீழே இருந்த கூட்டத்தின் நகர்வைக் குழு தவறாகக் கணித்து, ட்ரோன் மூலமாக சுட்டதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒன்யேமா நவாச்சுக்வு கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!
எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
ரூ.5060 கோடி உடனே தேவை! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
3 மணி நேரம் வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி