டெஸ்லாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - ஸ்வீடன், டென்மார்க்கில் தொழிலாளர்கள் போராட்டம்!


டெஸ்லா நிறுவனத்திற்கு முற்றும் சிக்கல்

ஸ்வீடன், டென்மார்க் நாடுகளில் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக, டெஸ்லா கார்கள் அந்நாட்டு துறைமுகங்களில் தேங்கும் அபாயம் நிலவி வருகிறது.

உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் தனது சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கிலும் அந்நிறுவனம் கார்களை விற்பனை செய்து வந்த போதும், அந்நாடுகளில் தயாரிப்பு தொழிற்சாலை எதையும் நிறுவவில்லை. இருப்பினும் அங்கு டெஸ்லா அமைத்துள்ள சர்வீஸ் செண்டர்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் போராட்டத்தால் ஸ்விடன், டென்மார்க்கில் விற்பனை, சேவை பாதிப்பு

இதனிடையே ஸ்வீடன் நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு சங்கம் அமைப்பது, ஊதிய முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை டெஸ்லா நிறுவனம் வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டின் தொழிலாளர் அமைப்பினர் வலியுறுத்தி இருந்தனர்.

ஒப்பந்தம் கையெழுத்திட தொழிலாளர் சங்கங்கள் நிர்பந்தம்

தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு துறைமுக தொழிலாளர்களும் டெஸ்லா கார்களை இறக்குமதி செய்யாமல் போராட்டம் நடத்துகின்றனர். மேலும் ஏற்கனவே வாங்கிய கார்களுக்கான லைசென்ஸ் பிளேட்டுகளை விநியோகம் செய்யாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது டென்மார்க் நாட்டிற்கும் இந்த போராட்டம் பரவியுள்ளது. அங்கிருக்கும் முக்கிய தொழிலாளர் அமைப்பான 3எஃப், டெஸ்லா நிறுவனம் டென்மார்க் சட்டப்படி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வர வேண்டும் எனவும், அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க், இது பைத்தியக்காரத்தனமானது என்று விமர்சித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x