இங்கிலாந்தில் முதியவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகைப் பொருட்களுடன் மனித மலம் கலந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லங்காஷயரில் வசிக்கும் 59 வயதான பில் ஸ்மித், ஒரு மாதத்திற்கும் மேலாக ஊருக்கு வெளியே வசித்து வருகிறார். தனக்குத் தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்காக, சூப்பர் மார்க்கெட் நிறுவனமான ஐஸ்லாந்தில் இருந்து ரூ.15,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டரின் பேரில் டெலிவரி செய்யப்பட்ட மளிகைப் பொருட்களை தனது சமையலறைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, கை தவறி பார்சல் கீழே விழுந்தபோது அதற்குள் மனிதக் கழிவு கலந்திருப்பது தெரியவந்ததாக ஸ்மித் கூறியுள்ளார். "அதைப் பற்றிச் சொல்ல அருவருப்பு என்பதைத் வேறு வார்த்தைகள் இல்லை" என்று நொந்துபோய் சொல்கிறார் ஸ்மித்.
மனிதக் கழிவு கீழே விழுந்ததைப் பார்த்து நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்ததாகவும், கீழே என்ன கிடக்கிறது என்று யோசித்தேன். பின் மற்றொரு பையைத் திறந்த பார்த்ததாகவும், அதிலும் அதேதான் இருந்ததாகவும், அதைக் கண்டு மிகவும் வெறுத்துப் போய், அருவருப்படைந்ததாக கூறியுள்ளார்.
"சூப்பர் மார்க்கெட்டைத் தொடர்பு கொண்டு, தனக்கு எந்த இழப்பீடும் வேண்டாம். அனுப்பிய அசிங்கத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியதாகவும், அவர்கள் தங்கள் அநியாயமான தவறை நியாயப்படுத்தாமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே விரும்புவதாகவும் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து சூப்பர் மார்க்கெட் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை. சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் இந்த விவகாரம் விசாரணை நடத்தி வருவதாக மட்டும் தெரிவித்துள்ளது.