இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்...சந்திரிகாவுக்கு மீண்டும் முக்கியத்துவம்!


சந்திரிகா குமாரதுங்க

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மீண்டும் உயர் பதவி வழங்குவது என அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலாக சந்திரிகா குமாரதுங்கவுக்கு உயர் பதவி வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சந்திரிகா குமாரதுங்க

இது குறித்து சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதற்கு இசைவு தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே, விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இது தொடர்பான பதவியை திருமதி குமாரதுங்கவுக்கு வழங்கும் வகையில் கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு, கட்சியின் மத்திய குழுவில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

x