சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட வங்கதேச சரக்கு கப்பலை, இந்திய கடற்படை போர்க்கப்பல் சென்று மீட்டுள்ளது.
மொசாம்பிக் தலைநகரான மாபுடோவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 55 ஆயிரம் டன் நிலக்கரி சரக்குகளுடன் 'எம்.வி.அப்துல்லா' என்ற சரக்கு கப்பல் பயணம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், இக்கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கி, கைப்பற்றினர். 'எம்.வி.அப்துல்லா' கப்பலில் இருந்த 23 கப்பல் மாலுமிகளையும் கடற்கொள்ளையர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஜாங்க ரீதியில் இந்திய கடற்படையின் உதவி நாடப்பட்டது. இந்த தகவல் கிடைத்தவுடன், நீண்ட தூர கடல்சார் ரோந்து (எல்ஆர்எம்பி) விமானம் உடனடியாக அனுப்பப்பட்டு, அன்று மாலையே எம்.வி.அப்துல்லா கப்பல் கண்டறியப்பட்டது. பின்னர், அக்கப்பலின் குழு உறுப்பினர்களின் நிலையை அறிய தகவல்தொடர்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், கப்பலில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த இந்திய போர்க்கப்பல் அப்பிராந்தியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை எம்.வி.அப்துலா கப்பலை, இந்திய போர்க்கப்பல் அணுகியது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விளைவாக ஆயுதமேந்திய சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து 23 வங்கதேச கப்பல் மாலுமிகளும் மீட்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். இந்நிலையில் சோமாலிய கடற்கொள்ளையர்களும் கப்பல்களை மீண்டும் தாக்க தொடங்கியிருப்பது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் சார் வணிகத்தில் கவலையை எழுப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!
‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை... பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... ஓபிஎஸ் திடீர் முடிவு!
கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!